போக்குவரத்து பணிமனை கழகத்தில் நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்...

போக்குவரத்து பணிமனை கழகத்தில் நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்...

Published on

பென்னாகரம் போக்குவரத்து பணிமனை கழகத்தில் மாற்றுப் பேருந்து கேட்ட நடத்துனூரை லஞ்சம் கொடுக்கவில்லை என்று திமுக தொழிற்சங்க தலைவர் வெற்றி என்பவர் சாலையில் வைத்து சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இயங்கி வருகிறது. இங்கு அதிமுக ,திமுக மற்றும் பாமக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்கு புறநகர பேருந்துகள், 34 நகர பேருந்துகள், 21 சிறப்பு பேருந்து 6 ,ஆக மொத்தம்  67 பேருந்துகள் இயங்கி வருகின்றன. பேருந்து ஓட்டுனர்கள் 136 பேர் , கண்டக்டர்கள் 125 பேர் பேருந்துகளை பழுது பார்க்கும் பணியாளர்கள் 30பேர் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில் பென்னாகரம் பணிமனையில் பணிபுரிந்து  தொழிற்சங்க நிர்வாகிகளையும் பணியாளர்களையும் பழிவாங்கும் நோக்குடன் திமுகவைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர் வெற்றி என்பவர் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஓட்டுநர்கள் பணியிட மாறுதல் கேட்கும் பொழுது 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி பணத்தை கொடுத்தால் மட்டுமே பணி வழங்குவதாகவும் அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் வெகு தொலைவில் உள்ள மாற்று இடங்களுக்கு விடுமுறை அளிக்காமல் இரவு பகலாக தொடர்ந்து பணி வழங்கி அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு கண்டைக்டர் ஒருவருக்கு  பணியிடமாறுதல் வேண்டி கேட்ட பொழுது 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளார். அவர் தன்னால் முடிந்ததை கொடுத்தபொழுது அதை ஏற்றுக் கொள்ளாத திமுகவைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர் வெற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்டைக்டரை திமுக தொழிற்சங்க தலைவர் பேருந்து பணிமனை கேட்டின் முன்பே சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் வயதான ஊழியர்களையும் காடு மலை போன்ற இக்கட்டான பகுதிகளுக்கு பணியிடமாறுதல் கொடுத்து அவர்களை பழிவாங்கி வருவதாகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 


தொழிற்சங்க தலைவர் என்பவர் ஊழியர்களின் நலன் கருதி அவர்களுக்காக பாடுபட வேண்டும் ,ஆனால் பென்னாகரம் பேருந்து பணிமனையில் தான் தலைவர் தனது சுயநலத்திற்காகவும் இங்கு உள்ள தொழிலாளர்களை பணம் கொடுக்கவில்லை என்றால் பழிவாங்கும் நோக்கத்திலும் செயல்பட்டு வருகிறார். மீறி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆளுங்கட்சி தொழிற்சங்க தலைவரை கேள்வி கேட்டால்  நான் சொல்வது தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற தொணியில் ஈடுபட்டு ஒரு பக்கம் வசூலையும் மறுபக்கம் ஊழியர்களை தொடர்ந்து வஞ்சித்து மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறார். 

மேலும் இது குறித்து மற்ற ஊழியர்கள் புகார் அளிக்க முற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு இடைக்கால பணி நீக்கம் அல்லது பணியிட மாறுதல் கொடுத்து தண்டிப்பதாகவும் மேலும் விடுமுறை அளிக்காமல் தொடர் பணி குறித்து அவர்களுக்கு ஓய்வில்லாமல் இரவு பகலாக பணி செய்ய வைத்து அலைக்கழிப்பதாகவும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஊழியர்கள் புகார் அளிக்கவும் முடியாமல் பயத்துடன் தவித்து வருகின்றனர். பென்னாகரம் பகுதி முழுவதுமே மலைப்பாங்கான மிகவும் இக்கட்டான பகுதிகளாக உள்ளதால் இங்கு பணி செய்வது மிகவும் கடினமான ஒன்று அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து ஊழியர்களை அலைக்கழித்து அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தண்டித்து வரும் திமுக தொழிற்சங்க தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும் என ஊழியர்கள் தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இவர் ஆளுங்கட்சி திமுக தொழிற்சங்க தலைவர் என்பதால் தான் இது போன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்காமல் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களின் பேருந்துகளுக்கு வழித்தடங்களில் முன்னுரிமை வழங்கி அவர்கள் பேருந்துகள் லாபமீட்டும் அளவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதன் காரணமாக அரசு பேருந்துகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. மேலும் தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான ஒகேனக்கல் பகுதிக்கு மாலை 6 மணிக்கு மேல் எந்த ஒரு அரசு பேருந்துகளும் செல்வதில்லை அவற்றை முழுமையாக கட்டுப்படுத்தி நிறுத்தியுள்ளார். மேலும் இந்த தகவலை அறிந்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற தகவல் தெரிந்த உளவுத்துறையினர் தகவல் உரிய அதிகாரிகளிடம் தகவல் அனுப்பியதால் உடனடியாக அவசரகால பணியாக போக்குவரத்து துறை மேனேஜரை பணியிடம் மாற்றம் செய்துள்ளனர்.

தற்போது சேலம் மாவட்டம் ஓமலூரில் பணியாற்றி வந்த அதிகாரியை நியமித்து வந்ததாக போக்குவரத்து துறை ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் தெரிவித்தனர்.மேலும் இது  ஒருபுறம் போக்குவரத்துக் கழக பணிமனை வஞ்சித்தும் மற்றொருபுறம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியும் வரும் திமுக தொழிற்சங்க தலைவரை உடனடியாக மாற்றி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பணிமனை பணியாளர்கள் மற்றும் மற்ற தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com