
சென்னை | கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது 28 வயது மகள் கல்லூரியில் எம்.ஃபில் படித்து வருகிறார்.
அவரது மகள் அதே கல்லூரியில் பயின்று வரும் குருமூர்த்தி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் பெரியார் திடலில் கலப்பு திருமணம் செய்துள்ளார். அதன்பின் இருவரும் பொள்ளாச்சி சென்று குடும்பம் நடத்தி வந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்றும் மேலும் வீட்டிலிருந்த 65 சவரன் நகை, ரூ 4 லட்சம் பணத்தை எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராஜமங்களம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் இந்த வழக்கை சரியாக விசாரிக்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டதால் இதுகுறித்து மீண்டும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து ஆய்வாளர் கண்ணனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்ற நேற்று கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | சாதிப்பெயரை சொல்லி பெண்ணை திட்டிய காவலர் கைது...