
திண்டுக்கல் | கொடைக்கானலில் தேசிய அளவிலான நடைபெற்ற நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கொடைக்கானல் கென்னல் கிளப், மெராஸ் கெனைன் கிளப் , சேலம் கென்னல் கிளப் ஆகியோர் இணைந்து நாய்கள் கண்காட்சியை நடத்தினர்.
இந்த நாய்கள் கண்காட்சியில் ராட் வில்லர், டாபர் மேன், பாக்ஸர், ஜெர்மன் ஷெப்பர்டு, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, பொம்மனேரியன்,லேபர் டாக், பக் உள்ளிட்ட 40 வகையான 281 வெளிநாட்டு உள்நாட்டு நாய்கள் கலந்து கொண்டது.
தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நாய்கள் பராமரிப்பாளர்களும் கலந்து கொண்டனர் . பல்வேறு பிரிவுகளாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. நாய்களின் மோப்ப திறன், பராமரிப்பு, விதிமுறை, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கண்காட்சியில் பங்கு பெற்ற நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விதவிதமான நாய்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் பொது மக்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.