540 கிடாயுடன்... சீரும் சிறப்புமாக நடந்த சேர்மேன் வீட்டு கல்யாணம்...

சிங்கம்புணரி அருகே மாவட்ட சேர்மன் இல்ல வரவேற்பு விழாவில் 15 ஆயிரம் பேருக்கு 700 கிடாய் விருந்து வழங்கி அசத்தியுள்ளார்.
540 கிடாயுடன்... சீரும் சிறப்புமாக நடந்த சேர்மேன் வீட்டு கல்யாணம்...
Published on
Updated on
1 min read

சிவகங்கை | சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் குன்னத்தூர் ஓவிஎம் கார்டனில் சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் அவர்களின் மகள் ஹரிப்பிரியா பி.ஆர்க். ஜெயக்குமார்.பீ.ஆர்க்  திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 12ந்தேதி சென்னையில் நடைபெற்றது.

தங்களது செல்லமகள் பிரமாண்ட திருமண விழாவை காண இயலாத தனது சொந்த கிராம மக்களுக்காக  குன்னாரம்பட்டியில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். தன் கிராம மக்கள் பிரமாண்ட கல்யாண கறி விருந்தில் பசியாறி மகிழ்ந்து செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை கல்யாணம் போல பிரமாண்ட பந்தல் கடந்த ஒரு மாதமாக தயார் செய்து வந்தனர்.

இன்று  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஒன்றியம் முழுவதும் வீடு தவறாமல் வரவேற்பு பத்திரிக்கை கொடுக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் வீடு தவறாமல் செய்த உதவியால் அந்த பகுதி மக்கள் குன்னத்தூர் பெரிய கண்மாய் சாலையில் 504 கிடாய் பாத்திரம், குத்துவிளக்கு, பழம் என 350 தட்டுகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் சீர்வரிசை பொருட்களாக சுமந்து வந்து தாய் வீட்டு சீதனமாக கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இன்றைய திருமண வரவேற்பு விருந்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சின்னையா, வைகைசெல்வன், கழக முன்னோடி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இந்த பிரமாண்ட விருந்தில் வகை வகையான சென்னை பிரியானி, திண்டுக்கல் பிரயானி பிரபலங்களால்  ஏற்பாடு செய்யப்பட்ட பிரியானி வகைகள் தயார்  செய்ய்ப்பட்டு அனைவருக்கும் மனதார பரிமாரப்பட்டது.

எஸ்.புதூர் ஒன்றியம் முழுவதிலும் இருந்து வந்த கிராம மக்களுக்கு காலை 10 மணிக்கு ஆரம்பித்த சுவையான பிரியாணியுடன் மனக்கும் கறி விருந்து மாலை வரை நடந்த பந்தியில்  சுமார் 20  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வயிறார பசியாறி சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com