எருதுவிடும் விழாவில் காளைகள் முட்டி 15 பேர் காயம்...

ஆம்பூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற இளைஞர்களை காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

எருதுவிடும் விழாவில் காளைகள் முட்டி 15 பேர் காயம்...

திருப்பத்தூர் | ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் விழாவில் திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள்  பங்கேற்றன இதில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வாடிவாசல் வழியாக கொண்டுவரப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

மேலும் படிக்க | 250 காளைகளை கண்டு களித்த 3000க்கும் மேற்பட்ட மக்கள்...

இதில் குறைந்த நொடியில் இலக்கை அடைந்த  பூங்குளம் சரித்திர நாயகன் காளைக்கு முதல் பரிசாக ஒரு லட்சத்து 5 ஆயிரமும், திருப்பத்தூர் பி.ஜி.எம் ராணி காளைக்கு 70 ஆயிரம் என மொத்தம் 64 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவை கண்டுகளிக்க சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவினை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

மேலும் படிக்க | 41ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா கொண்டாடிய கிராமம்...

இதில் தடுப்பு வேலிகளுக்குள் இளைஞர்கள் அதிகமாக கூடி நின்றதால் காளைகள் ஓட முடியாமல் திணறி திரும்பி சென்றதாலும், காளைகள் மீது கை போட முயன்ற 15 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டது மேலும் விழாவினை கண்டுகளிக்க வந்த வெளியூர் இளைஞர்களது இரண்டு இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க | முன்னறிவிப்பின்றி காளைகளை அவிழ்த்துவிட்ட உரிமையாளர்கள்...தாறுமாறாக ஓடிய மாடுகள் முட்டியதில்...நடந்தது என்ன?

மேலும் விழாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்த காளைகளின் இலக்கை விழாக்குழு உறுப்பினர் சரிவர கணக்கு எடுக்க வில்லை எனவும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளையுடன் வந்தவர்களை விழா குழுவினரை தரக்குறைவாக பேசியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் காவல் துறையினர் இரு தரப்பினரையும் துரத்தி கூட்டத்தை கலைத்தனர்

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...!