நாயை நாய் என்று கூப்பிட்டதால் முதியவருக்கு முடிவு கட்டிய குடும்பம்...

நாயை நாய் என்று கூப்பிட்ட உறவினரை இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ளார்.

நாயை நாய் என்று கூப்பிட்டதால்  முதியவருக்கு முடிவு கட்டிய குடும்பம்...

திண்டுக்கல் | தாடிக்கொம்பு உலகம்பட்டியார் கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செபஸ்தியான். இவருக்கு நிர்மலா பாத்திமா ராணி என்ற மனைவியும், வின்சென்ட் மற்றும் டேனியல் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். 

நிர்மலாவின் மகன்கள் இருவருக்கும் நாய்கள் வளர்ப்பதில் அதீத பிரியம் இருந்துள்ளது. 3 நாட்டு நாய்களை வீட்டில் வைத்து வளர்த்து வந்தவர்கள் அவ்வப்போது பிறரை பயமுறுத்தும்படியான செயல்களிலும் ஈடுபடுவது வழக்கம். ஆக, 2 மகன்களையும், 3 நாய்களையும் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்துள்ளார் தாய் நிர்மலா. 

மேலும் படிக்க | செல்போனில் பிரசவம் பார்த்த செவிலியர்... தாய், சேய் பலி...

இந்நிலையில் நிர்மலா ராணியின் வீட்டின் அருகே 62 வயதான ராயப்பன் என்பவரும் தன் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். நிர்மலா வீட்டின் வழியே சென்று வந்த ராயப்பனை நாய்கள் சேர்ந்து கொண்டு குரைப்பதும் கடிப்பதுமாய் இருந்து வந்துள்ளது. 

இதனால் நாயை கட்டிப் போட்டு வளர்க்குமாறு ராயப்பன் குடும்பத்தினர், நிர்மலாவிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதைக் கேட்டு ஆவேசமடைந்த நிர்மலாவின் மகன்கள், நாயை நாய் என கூப்பிடக்கூடாது என்றும் செல்லப் பெயர் வைத்தே அழைக்குமாறும் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | கேரளாவில், தனியார் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து...

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று மாலையில் ராயப்பன், விவசாயக் கிணற்றில் ஓடிக் கொண்டிருந்த மின்சார மோட்டாரை நிறுத்துமாறு தனது பேரனை அனுப்பியிருந்தார். அப்போது நாய் வந்தால் குச்சியைக் கொண்டு அடிக்குமாறும் கூறினார். 

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த 21 வயதான டேனியல் ராஜ், எங்கள் நாயை எப்படி நாய் எனக் கூறலாம் என ராயப்பனிடம் சண்டைக்கு சென்றுள்ளார். அப்போது ராயப்பனுக்கும், நிர்மலா குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு உண்டானது. 

மேலும் படிக்க | தங்கை மீது காதலில் விழுந்த அண்ணன், கிணற்றில் விழுந்து தற்கொலை...

டேனியல் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ராயப்பன். இதையடுத்து நிர்மலா பாத்திமா ராணி மற்றும் 2 மகன்கள் ஊரை விட்டே தப்பியோடி தலைமறைவாயினர். 

இந்த சம்பவம் அறிந்த அம்பாதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் தாடிக் கொம்பு காவல்நிலைய போலீசார், தப்பியோடிய நிர்மலா பாத்திமா ராணி, மகன்கள் வின்சென்ட், டேனியல் ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நாயை நாய் என்று சொன்னதால் ஆத்திரம் தாங்க முடியாமல் கத்தியை எடுத்துள்ளனர் இந்த பாசப்பறவைகள். நாய் மீது காட்டிய கரிசனத்தில் பாதி கூட பிற மனிதர்களிடத்தில் காட்டாமல் இருப்பதுதான் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

மேலும் படிக்க | குடும்பத் தகராறில் கல்லூரி மாணவர் தற்கொலை...