தாமிரபரணி ஆற்றில் மாணவி தற்கொலை முயற்சி ...

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் கல்லூரி மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாமிரபரணி ஆற்றில் மாணவி தற்கொலை முயற்சி ...

நெல்லை | பாளையங்கோட்டையை இணைக்கும் கொக்கிரகுளத்தில் உள்ள சுலோச்சனா முதலியார் பாலம் அருகில் சமீபத்தில் புதிதாக இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது. இந்த புதிய இணைப்பு பாலத்தில் இன்று பிற்பகல் சுமார் 2:30 மணி அளவில் இளம் பெண் ஒருவர் சுமார் 50 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து தண்ணீருக்குள் குதித்தார்.

தொடர்ந்து அந்த இளம் பெண் தண்ணீருக்குள் மூழ்கினார் இதனை அருகில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் பார்த்து தண்ணீருக்குள் நீந்தி சென்று அந்த இளம் பெண்ணை கரைக்கு கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்த பெண்ணுக்கு அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் முதலுதவி அளித்தனர்.

மேலும் படிக்க | பெற்றோர் அழைக்க வராததால் தற்கொலை முயற்சி... கால் முறிவு ஏற்பட்ட மாணவியின் நிலை பரிதாபம்...

தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் நெல்லை டவுனைச் சேர்ந்த கல்லூரி மாணவியான மஞ்சு என்பது தெரியவந்தது. மாணவி தற்கொலைக்கு முயன்றது ஏன்? பெற்றோருடன் ஏதும் தகராறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | 9 வருடங்களுக்கு முன்பு செய்த சம்பவம் ...வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்...