
இராமநாதபுரம் | ஆர்.எஸ்.மங்கலம் அருகே 17 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் நல்லமுத்து (50) என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். அதன் பிறகு இந்தத் தகவலை அறிந்து கொண்ட சிறுமியின் தாயார் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் நல்லமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.