
சிதம்பரம் அருகே முன்னாள் காதலியின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலை தளங்களில் தவறாக வெளியிட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அருகே பெரியகுமட்டி, ரோட்டு தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் தொழில் செய்து வரும் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மணிகண்டன் நடத்தையில் மாற்றம் தெரிந்ததால் அந்த சிறுமி பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : கோவையில் அமைச்சர் உதயநிதி...! 3 அரசு நிகழ்சிகளில் பங்கேற்பு...!