தாம்பரம் ஆணையரை எதிர்த்து முழக்கம்!

தாம்பரம் ஆணையரை எதிர்த்து முழக்கம்!

பிரபல பத்திரிக்கையாளர் வாராகி  தாம்பரம் காவல் ஆணையரை எதிர்த்து நீதிமன்ற வளாகத்தில் கோஷம் போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வாராகி. இவர் இந்தியன் ரிப்போர்டர் மாத இதழை நடத்தி வரும் ஆசிரியர். மேலும் இந்தியன் மக்கள் மன்றத்தையும் நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜின் புகைப்படத்தை சமூக வலை தளத்தில் பதிவிட்டு அதனுடன் ஒரு வீடியோவையும் சேர்த்து, காவல்துறையினர் மாமூல் வாங்குகிறார்கள். உங்கள் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறையின் லட்சணம் இது தான் என, அவரது சமூக வலைதள பக்கங்களில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் அந்த வீடியோவில் காவல்துறைக்கு மாதா மாதம் பணம் கொடுத்ததாக பேசிய நபர் விகரம்(எ) பாஸ்கர் பள்ளிகரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் தானும் எனது நண்பரான கார்த்திக்கும் கிழக்கு தாம்பரத்தில் ஓயோ நடத்தி வருகிறோம். கார்த்திக் சேலையூர் கேம்ப் ரோட்டில் தனியாக ஸ்பா நடந்தி வருகிறார். அங்கு வந்த வாராகி என்பவர் தன்னை ரிப்போர்டர் என்று அறிமுகம் செய்து கொண்டு, அனுமதியில்லாமல் ஸ்பா நடத்தி வரும் கார்த்திகை மிரட்டி மாதா மாதம் மாமூல் தர வேண்டும் என பணம் வசூல் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் விக்ரமை, கார்த்திக்குடன் சேர்ந்து ஸ்பா நடத்துமாறு வாராகி மிரட்டியுள்ளார். அதற்கு விக்ரம் மறுத்துள்ளார். அதற்கு வாராகி என்னை கவனித்து கொண்டால் அனைத்து பிரச்சனைகளையும் பார்த்து கொள்கிறேன் என கூறியுள்ளார். அப்படியே காவல்துறையில் சிக்கிக் கொண்டாலும் நான் சொல்வதை போல் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதாக சொல்லிவிடு என கூறியுள்ளார். 

அப்போதும் ஒப்புக் கொள்ளாததால், ஆத்திரமடைந்த வாராகி கடந்த 6ம் தேதி விக்ரமை மேடவாக்கம் பிரதான சாலை, வெள்ளக்கல் சுடுகாடு அருகே வழிமறித்து நீ ஸ்பா நடத்த ஒப்புக் கொள்ளவில்லையென்றால், உன் சம்மந்தப்பட்ட ஆடியோ, விடியோ என்னிடம் உள்ளது அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உன்னையும், உன் குடும்பத்தையும் அசிங்கபடுத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார். அப்போது காரில் அடியாட்கள் சிலர் இருந்துள்ளனர். 

இதனால் பயந்து போன விகரம் சொந்த ஊர் சென்றுள்ளார். அதன் பிறகு வாராகி சொன்னபடி 16ம் தேதி வீடியோவை வெளியிட்டு அவமானபடுத்தியுள்ளார்.  இதனால் மன உளைச்சல் அடைந்த விக்ரம் வாராகி மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இந்தியன் ரிப்போர்டர் மாத இதழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

அவர் மீது வழிமறித்து மிரட்டுவது, மிரட்டி பயத்தை ஏற்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை காவல்துறையினர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் வாராகியை ஆஜர் படுத்திய போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கூறியதை அடுத்து வராகியை நீதிபதி இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர்.

இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வெளியே வந்த வராகி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜை எதிர்த்து கோஷமிட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:காதலி படத்தை பேக் ஐடியில் பதிவிட்ட முன்னாள் காதலன் கைது!