காதலி படத்தை பேக் ஐடியில் பதிவிட்ட முன்னாள் காதலன் கைது!

காதலி படத்தை பேக் ஐடியில் பதிவிட்ட முன்னாள் காதலன் கைது!
Published on
Updated on
2 min read

காதலித்த பெண் காதலை கைவிட்டதால் காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் திரிஷா 26 ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவர் செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் பழக்கமான கொளத்தூர் பொன்னியம்மன்மேடு தேவகி நகர் பகுதியை சேர்ந்த செபாஸ்டின் என்கின்ற தேவேந்திரன் 29 என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திரிஷா, தேவேந்திரனுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிஷா வீட்டிற்கு வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். அப்போது திரிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் அதனை மறுக்கவே, திரிஷா தன்னுடன் இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போலியான அக்கவுண்ட் தயார் செய்து பதிவிட்டுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த திரிஷா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் திரிஷாவை சேர்த்தனர்.

இந்நிலையில் திரிஷா கொடுத்த புகாரின் பேரில் செம்பியம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.  இதில் இன்ஸ்டாகிராமில் தவறான புகைப்படங்களை வெளியிட்டது செபஸ்டின் என்கின்ற தேவேந்திரன்தான் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து செபஸ்டனை  நேற்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செபஸ்டின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com