விபத்தில் அக்கா கண் முன்னே தங்கை பலி...

நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி அக்கா கண் முன்னே தங்கை பலியாகிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் அக்கா கண் முன்னே தங்கை பலி...

திருவண்ணாமலை | ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுனர் லோகநாதன் இவருடைய மனைவி ஜெயந்தி.

இவர்களுக்கு ஜெயசுதா ,ஜெயவாணி ,டெல்லி ராணி மற்றும் பூமிநாதன் என்ற நான்கு குழந்தைகள் உள்ளனர். ஜெயசுதா கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றாள். டெல்லி ராணி கண்ணமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க | அரசு பேருந்து மீது வனத்துறை ஜீப் மோதி விபத்து!!!

நேற்று மாலை ஜெயசுதா மற்றும் டெல்லி ராணி ஆகியோர் பள்ளி முடிந்து வீடு திரும்பி, வீட்டிலிருந்த ஸ்கூட்டி இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரண்டு சக்கர வாகனத்தை ஜெயசுதா ஓட்டி சென்றுள்ளார் பின்னால் டெல்லி ராணி அமர்ந்து சென்றார்.

திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற சரக்கு வாகனம் 2 சக்கரம் வாகனம் வருவதை கவனிக்காமல் வலது புறமாக ஓட்டுநர் வாகனத்தை இயக்கி உள்ளார்.

மேலும் படிக்க | சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து...

சரக்கு வாகனம் திரும்புவதை அறியாமல் பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஜெயசுதா மற்றும் டெல்லி ராணி மீது சரக்கு வாகனம் மோதி, சக்கரத்தில் டெல்லி ராணி சிக்கி துடித்து இறந்துள்ளார்.

பலத்த காயமடைந்த ஜெயசுதாவை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த  பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

சகோதரி கண் முன்பு தங்கை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | மாமுல் வாங்குவதில் காவலர்களிடையே தகராறு.... இணை ஆணையருக்கு வந்த மொட்டை கடிதம்!!!