
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கிறிஸ்துவ மத போதகர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகாமிபுரம் கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, தடிக்காரன் கோணம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டான்லி குமார் என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். இவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் அவர்களின் கைபேசி எண்களை பெற்று மத போதனை என்ற பேரில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : உலக தண்ணீர் தினம்...முதலமைச்சர் விழிப்புணர்வு பதிவு...!
இதுகுறித்து சபை மக்கள் சார்பாக பெத்தநாடார்பட்டியை சேர்ந்த கல்யாணி என்பவர் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் பாதிரியார் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் மதபோதகர் ஸ்டான்லியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் பாலியல் சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலய மத போதகர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.