மூட்டை கட்டி வீசப்பட்ட பெண்... சடலமாக மீட்பு...

வேப்பனப்பள்ளி அருகே பெண் கொலை செய்யப்பட்டு மூட்டையில் கட்டி ஏாியில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூட்டை கட்டி வீசப்பட்ட பெண்... சடலமாக மீட்பு...

கிருஷ்ணகிரி | வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லை பகுதியில் ஓ என் கொத்தூர் கிராமத்தில் அருகே உள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவது கண்டு அப்பகுதியில் பொதுமக்கள் சென்று பார்த்தனர். 

அப்போது அந்த ஏரியின் கரையில் அழுகிய நிலையில் மூட்டையில் ஒரு சடலம் இருப்பது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த ஆந்திர மாநில குடிப்பள்ளி போலீசார் ஏரியில் கிடந்த மூட்டையை மீட்டனர். பின்னர் மூட்டையை பிரித்து பார்த்தபோது 25 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் அடித்து கொலை செய்து உடலை மூட்டை கட்டி ஏரியில்  வீசப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் பலி...

பின்னர் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றிய ஆந்திர மாநில போலிசார் குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

 மேலும் இந்த பெண் யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்?  என்று குடிப்பள்ளி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக எல்லையில் ஆந்திர மாநில ஏரியில் இளம் பெண் அடித்து கொலை செய்து மூட்டை கட்டி ஏரியில் சடலத்தை  மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | விமானம் மூலம் மருத்துவமனைக்கு வந்தடைந்த பெண்ணின் இதயம்...