சொந்த ஊருக்கு திரும்பும் போது நிகழ்ந்த சோகம்!!!

சேலத்தில் மகள் வீட்டு விசேஷத்தில் பேரன் பேத்தியோடு கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது நிகழ்ந்த துயர சம்பவம்!!

சொந்த ஊருக்கு திரும்பும் போது நிகழ்ந்த சோகம்!!!

பல்லடம்: பேருந்து நிலையத்தில் பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த 70 வயது மூதாட்டியின் கால் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறிய விபத்தில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் வால்பாறையை சேர்ந்த மூதாட்டி பலியானதால், பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். அப்பேருந்து நிலையத்தில் சேலத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் தனது பேரன் பேத்திகளுடன் பயணித்த வால்பாறையை சேர்ந்த 70 வயது மூதாட்டி அழகம்மாள் என்பவர் இயற்கை உபாதை கழிக்க வேண்டி ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கிறார்.

மேலும் படிக்க | தவறி விழுந்த இருவர் பலி!!! எதிரபாரா விபத்தால் பரபரப்பு!!!

அப்போது தவறி கீழே விழுந்த நிலையில் அவரின் கால்கள் மீது பேருந்து பின் சக்கரங்கள் ஏறியதால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, கோவை மாவட்டம் வால்பாறை உருலிக்கள் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணவனை இழந்த மூதாட்டி அழகம்மாள் 70.

இவர் தனது மகன் கட்டிட கூலி தொழிலாளி நமச்சிவாயம் மற்றும் அவரது நான்கு குழந்தைகளோடு வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேலம் தம்மம்பட்டியில் தனது மகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக மூதாட்டி அழகம்மாள் தனது பேரன் பரணிதரன் 14 பேத்தி நிவேதா 12 ஆகியோருடன் வால்பாறையில் இருந்து சென்றுள்ளார்.

இதனிடையே மகள் வீட்டு விசேஷம் முடிந்து இன்று காலை சேலத்தில் இருந்து ஈரோடு வந்து அங்கிருந்து பொள்ளாச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்து ஒன்றில் தனது பேரன் பேத்தியுடன் பயணித்துள்ளார்.அந்தப் பேருந்து பல்லடம் பேருந்து நிலையத்திற்கு வந்து பின்னர் கிளம்பிய நிலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மூதாட்டி அழகம்மாள் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து பேருந்தில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.

மேலும் படிக்க | தீயில் எரிந்து நாசமான வாழைத்தோட்டம்...!

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டியின் கால்கள் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியது.இதில் மூதாட்டி அழகம்மாள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.அதைக் கண்டு அவரது பேரன் பேத்தி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் விபத்தில் பலியான மூதாட்டியின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் கதிர் வடிவேலை கைது செய்தும், அரசு பேருந்து பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் பேருந்து நிலைய வளாகத்தில் அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி இயற்கை உபாதை கழிப்பதற்காக ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரங்கள் அவரது கால்கள் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே வால்பாறை சேர்ந்த மூதாட்டி பலியானது பயணிகளையும்,பொதுமக்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

மேலும் படிக்க | ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் விழுந்த கார்...!