தீயில் எரிந்து நாசமான வாழைத்தோட்டம்...!

திருச்செந்தூர் : வாழைத்தோட்டம் தீயில் எரிந்து சேதம்.

தீயில் எரிந்து நாசமான வாழைத்தோட்டம்...!

திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைக்கிணறு பத்துக்கண் பாலம் அருகே கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. அதில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினர், ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 4-மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஆறுஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான  சுமார்  ஏழாயிரம் வாழைகள் தீயில் எரிந்து சேதமாகியது.