கஸ்டமர் போல நடித்து திருடிய மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!

மொபைல் கடையில் மொபைல் வாங்குவது போல வந்து திருட்டு செய்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

கஸ்டமர் போல நடித்து திருடிய மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!

அருகம்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் அஜ்மீர் அலி(41) என்பவர் ரோஜா மொபைல்ஸ் என்ற பெயரில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இரவு மொபைல் வாங்க வந்த மர்ம நபர் ஒருவர் அஜ்மீர் அலியின் மனைவி கடையில் இருந்த போது, அவரது கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஒன்று, ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து அஜ்மீர் அலி கொடுத்த  புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு கிராம் தங்க மோதிரம்..!