இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு கிராம் தங்க மோதிரம்..! 

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு கிராம் தங்க மோதிரம்..! 

பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிராம் மோதிரம் வழங்கப்படவுள்ளது. 

மோடி பிறந்தநாள்:

பிரதமரின் பிறந்தநாளை இன்று முதல் அக்டோபர் 2 வரை, 15 நாட்களுக்கு வேற்றுமையில் ஒற்றுமை என்று பெயரில் பாஜக கொண்டாவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதன்மையான நோக்கமாக நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் "ஒரே இந்தியா மகத்தான இந்தியா" என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள்.

சிறப்பு செயலி:

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று, தூய்மை இயக்கம், மருத்துவ முகாம், மரக்கன்றுகள் வழங்குதல், அன்னதானம் உள்ளிட்ட பணிகளையும் பாஜகவினர் மேற்கொள்ளவுள்ளனர். பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்ல 'நமோ' மொபைல் செயலியில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: "இது சுதந்திரத்திற்கான போராட்டம், வரவிருக்கும் எதிர்காலத்திற்கான கடந்த காலத்துக்கான சுதந்திரம்."

சிறுத்தைகளுடன் மோடி:

பிறந்தநாளான இன்று காலை மத்திய பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, தெற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து அழைத்து வரப்படும் 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார்.

தங்க மோதிரம்:

தமிழகத்தில் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 2 கிராம் தங்க மோதிரம் பரிசாக அணிவிக்கப்படுகிறது. பிரதமரின் பிறந்தநாளுக்காக சென்னை கொளத்தூரில் 720 கிலோ மீன்கள் கொடுக்கப்படுகிறது.