பேருந்து சக்கரத்தில் சிக்கி இறந்த வாலிபர்!!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பேருந்து சக்கரத்தில் சிக்கி இறந்த வாலிபர்!!!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புதுக்குடி பகுதியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் நம்பர் ஒன் டோல்கேட் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்அகிலாண்டபுரம் அடுத்து பனையடி கருப்பு கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது திருச்சியில் இருந்து லால்குடி வழியாக தஞ்சாவூர் நோக்கி வந்த தனியார் பேருந்து மாதவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மேலும் படிக்க | பேருந்து லாரி மோதி 4 பேர் படுகாயம்!!! நெடுஞ்சாலை விபத்தால் பரபரப்பு!!!

இந்த விபத்தில் மாதவன் மோட்டார் சைக்கிளுடன் பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தினால் நம்பர் ஒன் டோல்கேட் - லால்குடி சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | லோடு ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து...!