பேருந்து லாரி மோதி 4 பேர் படுகாயம்!!! நெடுஞ்சாலை விபத்தால் பரபரப்பு!!!

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேர்ந்து - லாரி மோதல்  4 பேர் படுகாயம் அடைந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேருந்து லாரி மோதி 4 பேர் படுகாயம்!!! நெடுஞ்சாலை விபத்தால் பரபரப்பு!!!

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதேசமயம் தேனியில் இருந்து தூத்துக்குடி நோக்கி மளிகை பொருட்கள் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.

லாரியை உசிலம்பட்டி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவரின் மகன் ரவி என்பவர் ஓட்டி வந்துள்ளார். எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் சந்திப்பு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும் ,லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் படிக்க | லோடு ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து...!

இதில் அரசு பஸ் டிரைவர் விஜயன், நடத்துன ரமேஷ், பஸ்ஸில் இருந்த பயணிகள் படந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த மாடத்தி அம்மாள்,  சோலையம்மாள் ஆகிய நான்கு பெரும் பலத்த காயம் அடைந்தனர்.

இது ஊருக்கு தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் வரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | விபத்தில் சரிந்தவர்கள் மீது ஏறிய லாரி...! பரபரப்பான சிசிடிவி காட்சி..!