நள்ளிரவில் வாகன திருட்டில் ஈடுபட்ட திருடர்களின் சிசிடிவி காட்சிகள்...

நள்ளிரவில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை திருடியவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
நள்ளிரவில் வாகன திருட்டில் ஈடுபட்ட திருடர்களின் சிசிடிவி காட்சிகள்...
Published on: 
Updated on: 
1 min read

கிருஷ்ணகிரி | நகரில் அவ்வப்போது பைக் திருட்டு அதிகமாகி வருகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியான அம்சா ஹுசைன் தெருவில் பைக் திருட்டு நடந்துள்ளது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அம்சா உசேன் தெருவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த bajaj pulsar பைக்கை மூன்று பேர் திருடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. முதலில் இரண்டு பேர் வந்து இருசக்கர வாகனத்தின் சைட் லாக்கை உடைத்து விட்டு செல்கின்றனர்.

பின்னர் அக்கம் பக்கம் யாராவது பார்க்கின்றனரா என்று நோட்டமிட்டு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அவர்கள் வந்து அந்த வாகனத்தை திருடி செல்கின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும் கிருஷ்ணகிரி நகரில் அதிகளவு இது போன்ற தொடர் இருசக்கர வாகன கொள்ளை நடைபெற்று வருவதால் காவல்துறையினர் இரவு நேரத்தில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com