கேரளாவில் ‘நரபலி’ ... இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி புதைத்த பயங்கரம்...
கேரளாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா: பத்தனந்திட்டா மாவட்டம் இலந்தூர் பகுதியை சேர்ந்த பகவல்சிங் லைலா தம்பதியினர். இவர்கள், தொழில் விருத்தி அடைய எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது ஷாபி எனும் மந்திரவாதியை அணுகியுள்ளனர். தங்கு தடையின்றி தொழில் நடைபெற இரண்டு தமிழ் பெண்களை நரபலி கொடுக்க வேண்டும் என தம்பதியிடம் மந்திரவாதி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | #BREAKING | உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு... தற்கொலை முயற்சியால் பரபரப்பு....
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 தமிழக பெண்கள்:
இதையடுத்து குமரி மாவட்டம் நாகர்கோவிலில் லாட்டரி சீட் விற்பனை செய்த 2 பெண்களை தகவல் கூறாமல் பணம் கொடுத்து தம்பதியினர் அழைத்து வந்துள்ளனர். நரபலிக்கு அழைத்து செல்லப்படுகிறோம் என தெரியமால் ஏர்ணாகுளம் அருகே நடந்த பூசையில் நள்ளிரவில் 2 பெண்களும் பங்கேற்றனர்.
இரு பெண்களையும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை கழுத்தறுத்து உடல்களை துண்டு துண்டாக்கி கொடூரமான முறையில் நரபலி கொடுத்து பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கரப்பான்பூச்சி போல கவிழ்ந்த கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள்...
பெண்களை நரபலி கொடுத்த தம்பதி, மந்திரவாதி கைது:
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவல் பேரில் தம்பதியரை போலீசார் கைது செய்தனர். எர்ணாகுளத்தில் பதுங்கி இருந்த போலி மந்திரவாதியையும் கைது செய்த போலிசார், அண்மையில் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியலை சேகரித்து வருகின்றனர்.
--- பூஜா ராமகிருஷ்ணன்
மேலும் படிக்க | சும்மா கிடந்த வாகனங்களையும் அருகிலிருந்த மக்களையும் வெட்டிய போதை ஆசாமிகள்...