தாலி கயிற்றால் மனைவியை கொலை செய்த கணவன்...

மனைவியின் நடத்தையில் சந்தேகத்தில் கணவன், மனைவியை கழுத்தை நெருங்கி கொலை கணவன் கை குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார்.

தாலி கயிற்றால் மனைவியை கொலை செய்த கணவன்...

திருவண்ணாமலை |  செய்யாறு அடுத்த அனப்பத்தூர் கிராமத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கணவன் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு கைக்குழந்தையுடன் தப்பி ஓடி விட்டார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

செய்யாறு அடுத்த அனப்பத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 28 இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா 23 என்பவருடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க | திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.83 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!

இந்த நிலையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் எட்டு மாதமாக கௌசல்யா செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட்டில் பணிபுரிந்து வந்தனர் இந்த நிலையில் கௌசல்யாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரஞ்சித்துக்கும் கௌசல்யாக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை போட்டுக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் இன்று கௌசல்யாவும் ரஞ்சித்தும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் அப்போது கோபமடைந்த ரஞ்சித் கௌசல்யாவின் தாலி கயிறாலும் மற்றும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர் பின்னர் ரஞ்சித்தின் கை குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மேலும் படிக்க | நள்ளிரவில் பைக் திருட முயற்சி... வெளியான சிசிடிவி காட்சிகள்...

இதை அடுத்து தகவல் அறிந்த அனக்காவூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கௌசல்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கௌசல்யாவின் தாய் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரஞ்சித்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் கணவன் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | பரமக்குடி தனியார் மருத்துவமனை மீது 3 வாலிபர்கள் தாக்குதல்...