பரமக்குடி தனியார் மருத்துவமனை மீது 3 வாலிபர்கள் தாக்குதல்...

மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்து மருத்துவமனை மீது கல்வீசி தாக்கிய மூன்று இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.

பரமக்குடி தனியார் மருத்துவமனை மீது 3 வாலிபர்கள் தாக்குதல்...

ராமநாதபுரம் | பரமக்குடியில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்து மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் பிரசாந்த் 20.

இவர் டூவீலரில் சென்றபோது மாடு குறுக்கே வந்ததால் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ( செல்வா மருத்துவமனை) சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க | புறாக்களை கொன்று சிக்கன் என விற்ற நபர்கள்... மும்பையில் நடந்த அவலம் அம்பலம்...

அப்போது தாமதமாக சிகிச்சை அளித்ததாக கூறி பிரசாந்த் அவரது நண்பர்கள் டாக்டர் விக்னேஷை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனையின் முன்புற கண்ணாடி சேதுமடைந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் விக்னேஷ் புகாரின்பேரில் பரமக்குடியை சேர்ந்த பிரசாந்த் 20,. கணேஷ்பாண்டியன் 25. ராமநாதபுரத்தை சேர்ந்த சிவசங்கரன், 22. ஆகிய மூன்று இளைஞர்களை பரமக்குடி டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | என்னடா பொசுக்குன்னு கொளுத்திப்புட்ட? இவரல்லவா உயிர் நண்பன்?