
திண்டுக்கல் | வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி(32). இவர் பூண்டு வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள சகோதரர் வீட்டில் தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து சின்ன தம்பியை சரமாரி வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடம் சென்று போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொலையுண்ட சின்னதம்பி மீது காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பால் வியாபாரியை கொலை செய்த ரவுடிக்கு ஆயுள் தண்டனை...