4 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மருத்துவர்...

சிகிச்சைக்காக வந்த 4 வயது சிறுமியிடம் மருத்துவர் ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மருத்துவர்...

கடந்த மார்ச் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), ஒரு 4 வயது சிறுமி, தனக்கு வயிற்று வலி எடுத்ததாக தனது தாஇடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியின், ஆதர்ஷ் நகரில் உள்ள ஒரு க்ளினிக்-கிற்கு தனது மகளை புகார் தாரர் அழைத்துச் சென்றுள்ளார்.

உள்ளே சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த போது, தனது பர்சை வெளியே விட்டதை உணர்ந்த தாய், அதனை எடுக்க வெளியே சென்றுள்ளார். பர்சை எடுத்து மீண்டும் உள்ளே வந்து பார்த்த போது, மருத்துவர், சிறுமியின் ஆடைக்குள் கைகளை வைத்ததிப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து வெளியேவும் கிளம்பியுள்ளார்.

பின், அதே பகுதி காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகாரளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 வயது சிறுமியை தனது இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டது குறித்து நடைபெறும் இந்த விசாரணையால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (ANI)

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது... 5 கிலோ கஞ்சா பறிமுதல்...