பேருந்தை மடக்கி சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல்...ஏன் தெரியுமா?

பேருந்தை மடக்கி சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல்...ஏன் தெரியுமா?
Published on
Updated on
1 min read

நாகை அருகே பேருந்தில் பிடித்த பாடலை வைக்காததால் ஆத்திரமடைந்த பயணி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

மினி பேருந்தில் ஏறிய பயணி:

நாகப்பட்டினத்தில் இருந்து ஆய்மழை கிராமத்திற்கு செல்லும் தனியார் மினி பேருந்து ஒன்று நாகை கோட்டைவாசல்படி சென்றது. அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணி ஒருவர் ஏறி உள்ளார். 

பாடலை மாற்ற சொன்ன பயணி:

நாகை கோட்டைவாசல் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பயணி ஒருவர், மினி பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்தில் ஒலித்த பாடலை மாற்றி வேறு பாடல் வைக்குமாறு பேருந்து  ஓட்டுனரிடம் கூறியுள்ளார்.

வேறு பாடலை வைக்க மறுத்த ஓட்டுனர்:

பயணியின் கோரிக்கையை பேருந்து ஓட்டுநர் கேட்கவில்லை. வேறு பாடலை மாற்றுவதற்கு ஓட்டுநர் மறுத்த நிலையில், அந்த நபர் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு ”சிக்கல்” பேருந்து நிலையத்திலேயே இறங்கியுள்ளார். 

மீண்டும் நாகை நோக்கி வந்த பேருந்து:

அந்த நபர் பேருந்தை விட்டு இறங்கியவுடன், ஆய்மழை கிராமம் நோக்கி சென்றது. பின் அந்த கிராமத்தை சென்றடைந்த மினி பேருந்து அதே வழியாக மீண்டும் நாகை வந்துள்ளது. 

கூலி படையுடன் நின்றுக்கொண்டிருந்த பயணி:

பேருந்தில் வேறு பாடலை மாற்ற சொல்லியும் ஓட்டுனர் மாற்றாததால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், பேருந்தின் வருகைக்காக சிக்கல் ரயில்வே கேட் அருகே தனது நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பலோடு காத்திருந்தார். அப்போது அந்த பேருந்து சிக்கல் நிறுத்தம் நோக்கி வந்ததை பார்த்த அந்த கும்பல் பேருந்தை மடக்கி நிறுத்தியுள்ளனர்.

சரமாரி தாக்குதல்:

பேருந்தை நிறுத்திய வேகத்தில் பேருந்து ஓட்டுனர் பாரதி மற்றும் நடத்துனர் பாலமுருகன் ஆகிய இருவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி, அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் தரதரவென இழுத்துச் சென்று அவர்கள் மீது அந்த கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஓட்டுநரும், நடத்துனரும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக கீழ்வேளூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வைரலாகும் வீடியோ காட்சிகள்:

பேருந்தில் பிடித்த பாடலை வைக்காததால் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகளும், நடத்துநர் ரத்த காயங்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் யேண்டா டேய்... ஒரு பாட்டு மாற்றவில்லை என்பதற்காகவெல்லாம் அடா அடிப்பிங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com