அலைபாயுதே படப்பாணி 2கே காதலர்கள்... காவல்துறை செய்தது என்ன?!!

அலைபாயுதே படப்பாணி 2கே காதலர்கள்... காவல்துறை செய்தது என்ன?!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அலைபாயுதே பட பாணியில் இளம்பெண் ஒருவர் தாலியை மறைத்து 6 மாத காலம் தாய் வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். 

2கே கிட்ஸ்களின் அவசரக்காதல் அனைவரையும் வாயடைக்க வைக்கும் இந்த காலத்தில் கூட அலைபாயுதே பாணியில் ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. கறம்பகுடி தாலுகா கொண்டையான்பட்டியைச் சேர்ந்தவர் சுகன்யா. 24 வயதான இவரை மன்னார்குடியைச் சேர்ந்த ரோஷ்னேஷ் என்பவர் 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளார். 

இருவரது வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அலைபாயுதே பட பாணியில் திருமணம் செய்துள்ளது இந்த இளம்ஜோடி.  கடந்த செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு கிளம்பிய ரோஷ்னேஷ் - சுகன்யா இருவரும் நாகப்பட்டினம் திருப்பூண்டிக்கு சென்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். 

இதைத் தொடர்ந்து அவரவர் வீடுகளுக்கு சென்ற இவர்கள், எதுவுமே நடக்காதவாறு நடந்த திருமணத்தை மறைத்துள்ளனர்.  இந்நிலையில் சுகன்யா மீது சந்தேகம் கொண்ட பெற்றோர், திருமண ஏற்பாடுகளை தொடங்கினர்.  அப்போது அதிர்ந்து போன சுகன்யா ஆசைக்காதலனுக்கு தகவல் தெரிவித்தார். 

இதைக் கேட்டு விரைந்து வந்த ரோஷ்னேஷ் புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று திருமணமான ஆவணங்களைக் காட்டி தனது காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தார்.  அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இளம்ஜோடிகளை அழைத்து சேர்த்து வைத்தனர். 

அப்போது காவல்நிலையத்தில் ஒன்று திரண்ட உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் இறங்கியதோடு செய்தியாளர்களையும் ஒருமையில் பேசி அனுப்பினர்.  சினிமா பட பாணியில் காதலும், மோதலும் நிறைந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  இறுதியில் காவலர்களின் அறிவுறுத்தலின்படி காதலர்கள் பாதுகாப்போடு அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குற்றங்களை தடுத்து வந்த காவல் நிலையம், அன்று ஏனோ, காதல் நிலையமாகி இளம் ஜோடிகளின் வாழ்க்கையை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க:    ”நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு இது அச்சாரமாக...” நன்றி தெரிவித்த முதலமைச்சர்!!!