விஷச் சாராயம் அருந்திய 3 பேர் உயிரிழப்பு...ஆபத்தான நிலையில் 16 பேர்...விசாரணையில் போலீசார்!

விஷச் சாராயம் அருந்திய 3 பேர்  உயிரிழப்பு...ஆபத்தான நிலையில் 16 பேர்...விசாரணையில் போலீசார்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இந்த கள்ளச் சாராய பாக்கெட்டுகளை அதே ஊரைச் சேர்ந்த சங்கர் , தரணிவேல், மண்ணாங்கட்டி . சந்திரன். சுரேஷ், மண்ணாங்கட்டி  உள்ளிட்ட ஆறு பேர் வாங்கி குடித்துள்ளனர். ஆறு பேரும் வீட்டிற்கு சென்றவுடன் மயங்கி விழுந்ததால் உறவினர்கள் உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதையும் படிக்க : கர்நாடக முதலமைச்சர் யார்? வாய்ப்பு அதிகம் இருப்பது யாருக்கு? சித்தராமையாவா (அ) சிவகுமரா...

இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் எக்கியார் குப்பத்தில் சோதனை நடத்தினர். அப்போது சாராயம் அருந்தி மயக்க நிலையில் இருந்த மேலும் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.