நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது உண்மையா..? அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் தோல்விகள் கூறுவதென்ன?!!

நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது உண்மையா..? அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் தோல்விகள் கூறுவதென்ன?!!

உலகின் தலைசிறந்த விண்வெளி மையமான நாசாவில் இருந்து ஆர்ட்டெமிஸ் 1 சோதனை ஓட்டத்தை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி விட்டோம் என மார்தட்டிக் கொண்ட அமெரிக்கா தற்போது திணறுவது ஏன்? நீல்ஆம்ஸ்ட்ராங் உண்மையாகவே நிலவில் கால் வைத்தது பொய்யாக இருக்குமா? முழு விவரத்தை காணலாம் இந்த செய்தித்தொகுப்பில்.. 

நிலவில் கால் வைத்தவர் யார் என்று கேட்டால் சிறு குழந்தைக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது.. 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதியன்று அப்பல்லோ 11 என்ற ராக்கெட் நிலவுக்கு அனுப்பப்பட்டது. எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் பயணித்த நிலையில், அச்சமின்றி நிலவில் கால் வைத்து சாதனை படைத்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். 

நீல்ஆம்ஸ்டராங் மற்றும் சகவீரர்கள் நிலவில் இறங்கி துள்ளி குதிப்பதும், அங்கு அமெரிக்க கொடியை நட்டு வைத்த காட்சிகளைக் கண்டு உலகமே மூக்கின் மீது விரல் வைத்தது.  நிலவில் கால் வைத்து சாதித்ததாய் அமெரிக்கா கூறியபோதும், இந்தியா உட்பட பல நாடுகள் இதனை நம்பியிருக்கவே இல்லை. நிலவில் தரையிறங்குவதற்கான ரஷ்யாவின் முயற்சிகள் தற்போது வரையிலும் தோல்வியில்தான் முடிந்துள்ளன. 

ரஷ்யர்களைக் காட்டிலும் தாங்கள் அதிமேதாவிகள் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஆவலில் அமெரிக்கா பொய்யான தகவல்களை தந்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்து வந்தது. ஈர்ப்பு சக்தி, காற்று விசை என பூமியில் உள்ள உயிர்வாழும் காரணிகள் எதுவுமே இல்லாத நிலவில் எப்படி தரையிறங்க முடியும்? என்பதில் தொடங்கி கொடியை நட்டு வைத்தது, மணல் துகளை எடுத்தது என எல்லாவற்றிலுமே எழுந்த சந்தேகம் அன்றே வேர்விட்டு வளர்ந்து இன்று விருட்சமாய் மாறி நிற்கிறது. 

இவ்வாறு சந்தேகம் கலந்த கேள்விகள் இந்தியா, ரஷ்யா உள்பட பிற நாடுகளுக்கு எழுந்த நிலையில் அமெரிக்க அறிவித்த திட்டம்தான் ஆர்ட்டெமிஸ் 1. 

ஆர்ட்டெமிஸ் 1 என்று அழைக்கப்படும் இந்த பிரமாண்ட திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே செயற்கைக்கோளை ஏவுவதற்கு தயாரானது நாசா. ஆனால் விண்வெளிக்கு கிளம்புவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே எஞ்சின் செயலிழந்து போனதால் அந்த முயற்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

இதையடுத்து செப்டம்பர் 3-ம் தேதியன்று இரண்டாவது முறையாக அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டு அதுவும் ஒத்தி வைக்கப்பட்டது. இரண்டு முறை தோல்வியில் முடிந்ததால் துவண்டு போன அமெரிக்கா தற்போது மூன்றாவது முறையாக விண்ணில் ஏவ இருந்த ஆர்ட்டெமிஸ் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் இந்த முறை மனிதர்களுக்கு பதிலாக பொம்மைகளை மட்டுமே வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது நாசா. 

சுமார் 42 நாட்களில் 1.3 மில்லியன் மைல்கள் வரை பயணிக்கும் என அறிவிக்கப்பட்ட இந்த ஆர்ட்டெமிஸ் செயற்கைக்கோளை வைத்து அமெரிக்கா மீண்டும் ஒரு அரசியல் செய்கிறதோ என்றும் தோன்ற வைத்துள்ளது. 

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே சர்வசாதாரணமாக நிகழ்த்தி முடிக்கப்பட்டதென்றால் இந்த காலத்தில் மீண்டும் மனிதர்களை அனுப்புவது அவ்வளவு சிரமமா? இன்றைய நிலைமையில் ஆர்ட்டெமிசில் பொம்மைகளை வைத்தே அனுப்ப முடியாமல் திணறியதென்றால் சந்திரனில் நீல்ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது பொய்யாகத்தானே இருக்க முடியும்?

இதையும் படிக்க:   இந்தோனேஷியாவில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை  ஏற்றுக் கொண்டது இந்தியா!!!