இந்தோனேஷியாவில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை  ஏற்றுக் கொண்டது இந்தியா!!!

இந்தோனேஷியாவில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை  ஏற்றுக் கொண்டது இந்தியா!!!
Published on
Updated on
1 min read

இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது.  உணவு, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றம் தொடர்பான அமர்வுகளில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் உரையாற்றினர். 

தொடர்ந்து தமன் ஹுதன் ராயா பகுதியில் நுரா ராய் சதுப்புநிலக்காடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதையடுத்து அப்பகுதியில் பிரதமர் மோடி உற்சாகத்துடன் மரக்கன்றை நட்டு வைத்தார். 

இதைத்தொடர்ந்து பிரான்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரனுடன் மதிய உணவு நேரத்தில் சந்தித்து இருதரப்புப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.  இந்நிலையில், ஜி20 நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டமைப்பு உலக அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

உலக வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு மிகமுக்கியம் என குறிப்பிட்ட அவர்,  இந்தியா ஜனநாயகத்தின் தாய் எனவும் கூறினார்.  ஜி20 கூட்டமைப்பின் ஓராண்டு பதவிக்காலத்தில் நாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு ஆற்றல் மிகுந்த முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார் பிரதமர் மோடி.  “ ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை கூட்டமைப்புக்கான கருப்பொருளாகவும் முன்மொழிந்தார். 

இதைத்தொடர்ந்து இந்தோனேசியா பிரதமர் ஜோகோ விடோடோவிடம் இருந்து, ஜி20 தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com