எதிர்த்து பேசினால் கைது செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா...? அண்ணாமலை ஆவேசம்!

எதிர்த்து பேசினால் கைது செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா...? அண்ணாமலை ஆவேசம்!
Published on
Updated on
1 min read

எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வதுதான் திராவிடமாடல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

ஆ.ராசா பேச்சு:

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்,  திமுக எம்.பி.யும், அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ஆன ஆ.ராசா, மனுஸ்மிருதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை சொல்வதாக சில கருத்துகளை முன்வைத்து பேசியிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் பலர் ஆதரவாகவும், எதிர்த்தும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்திருந்தனர். அதேசமயம், ஆ.ராசாவின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், பாஜகவினர் ஆ.ராசாவின் பேச்சுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனால் பாஜக தரப்பில் பலரை திமுக கைது செய்தது.

தமிழகத்தில் இருள் சூழ்வது போல் திமுக சூழ்ந்துள்ளது:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், பாஜக சார்பில் நடைப்பெற்ற பிரதமர் மோடி பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த பூமியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை பேச வைத்தது பாஜகவுக்கு பெருமை என அண்ணாமலை பெருமிதம் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இருள் சூழ்ந்தது போல் திமுக சூழ்ந்துள்ளதாக சாடினார்.

எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்யும் திமுக:

தொடர்ந்து, தமிழகத்தில் பெட்டி கடைகளில் கூட கஞ்சா விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், அவர்களை கைது செய்யாத திமுக, தன்னை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை மட்டும் கைது செய்து வருகிறது. அதாவது, திமுக எம்.பி. ஆ.ராசா இந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை  கொச்சப்படுத்தி பேசியுள்ளார். இதை எதிர்த்து குரல் கொடுத்ததற்கு 9 மாவட்டங்களில் உள்ள பாஜக தொண்டர்கள் 107 பேரை திமுக கைது செய்துள்ளது.

குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா என்று திமுகவை சாடி பேசினார்.  இப்படி தவறை தட்டிக் கேட்டால் குற்றம் என்றால், அதைத் தொடர்ந்து பாஜக  செய்து கொண்டே இருக்கும் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com