அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?
Published on
Updated on
1 min read

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

மீண்டும் இன்று விசாரணை:

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு குறித்தான விசாரணை கடந்த 1 வார காலமாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கானது மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இ.பி.எஸ். வாதம் முன்வைக்கப்பட்டது, அதில், நிர்வாக சிக்கலை ஏற்படுத்தவே இந்த வழக்குகள் தொடரப்பட்டிருப்பதாக இ.பி.எஸ். தரப்பு தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க வேண்டும் என்பது அ.தி.மு.க. பொதுக் குழு தீர்மானத்தில் இல்லாதபோது, பின்னர் எப்படி நீக்கம் செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

ஈபிஎஸ் தரப்பு வாதம்:

இதற்கு அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, தேவைப்படும்போது, எப்போது வேண்டுமானாலும், பொதுக்குழுவைக் கூட்டலாம் என்றும், பொதுக்குழு முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், இரட்டை தலைமையில் முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் எழுந்ததால், உரிய முறையில் ஒற்றைத்தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்ற வாதத்தையையும் முன்வைத்தனர்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்: 

அதைத்தொடர்ந்து, பிற்பகலில் தொடங்கிய விசாரணையில்,  ஓ.பி.எஸ். தரப்பின் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, அதிமுகவில் இல்லாத 2 பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே எடப்பாடி பழனிசாமி தரப்புதான் என  ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தனர். 

2 பதவிகளையும் உருவாக்கி அனைத்து நடவடிக்கையும் முறையாக சென்றபோது குழப்பம் விளைவிக்க முயற்சி செய்ததாகவும், கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை எனவும் ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது. 

ஒத்திவைத்த நீதிமன்றம் :

இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தரப்பு வாதத்தை ஜனவரி 16-ம் தேதிக்குள் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com