வாகனங்கள், கடைகள் சூறையாடல்...7 பேருக்கு வெட்டு...அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்...அச்சத்தில் மக்கள் !

வாகனங்கள், கடைகள் சூறையாடல்...7 பேருக்கு வெட்டு...அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்...அச்சத்தில் மக்கள் !

Published on

சென்னை, வியாசர்பாடி, கொடுங்கையூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போதை கும்பல் ஒன்று வாகனங்களை அடித்து உடைத்து, பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்களை சூறையாடிய போதை கும்பல்:

வியாசர்பாடி பி.வி காலனி, சாஸ்திரி நகர் மற்றும் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் எட்டு பேர் கொண்ட போதை கும்பல், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார், நான்கு மினி வேன், மூன்று கடைகள் ஆகியவற்றை சூரையாடினர். மேலும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி உட்பட 7 பேரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில்   காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7 தனிப்படை அமைப்பு:

முன்னதாக இந்த கும்பல் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவரின் வீட்டை கேட்டு அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூவரையும் வெட்டியதோடு, 3 கார்களை சேதப்படுத்தி விட்டு தப்பியோடி உள்ளனர். இப்படி அடுத்தடுத்து அரங்கேறிய இச்சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், 7 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com