26/11 தாக்குதல்...உண்மையில் நடந்தது என்ன...வாயை திறந்த அப்போதைய செயலாளர்!!!

26/11 தாக்குதல்...உண்மையில் நடந்தது என்ன...வாயை திறந்த அப்போதைய செயலாளர்!!!

பிரதமர் மன்மோகன் சிங் அரசில் கே.எம்.சந்திரசேகர் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார்.  2011 வரை இந்தப் பதவியில் இருந்த அவர் எழுதிய 'எனது வார்த்தை போல் நல்லது' (As good as my word) என்ற புத்தகத்தில் 2008ல் மகாராஷ்டிராவின் 26/11 தாக்குதலின் பல மறைக்கப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். 

குழப்பமான சூழல்:

முன்னாள் கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் அவரது 'எனது வார்த்தை போல் நல்லது' என்ற புத்தகத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி குறித்து பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.  மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஒரு குழப்பமான சூழ்நிலை உருவானது என்றும் அவர் கூறியுள்ளார். 

தடுமாறிய அரசு:

அதாவது, தாக்குதலின் போது, ​ என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  இந்த செய்தி அப்போது ஆட்சி செய்த மத்திய அரசிடம் முடிவெடுக்கும் திறன் இல்லாததையே தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.  தாக்குதலுக்குப் பிறகு, மத்திய மட்டத்தில் யார் என்ன செய்வார்கள் என்பது குறித்து உண்மையான தெளிவு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நிர்வகிப்பதில் குழப்பம்:

மேலும் அந்த புத்தகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது அரசின் சரியான முடிவு என்றும் எழுதியுள்ளார்.   ஆனால், பாதுகாப்பு விஷயங்களில் அவரை சுதந்திரமாக வைத்திருக்காதது பலவித குழப்பத்தையே ஏற்படுத்தியது எனவும் கூறியுள்ளார்.  

மேலும், இது பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் என்எஸ்ஏ மற்றும் கேபினட் செயலாளரின் பங்கு மற்றும் அதிகாரம் என்ன என்பதில் தெளிவான வரையறை செய்யப்படாதது பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தியது எனவும் கூறியுள்ளார். அதனோடு 26/11 தாக்குதல் கடுமையான அவசரநிலையில் முடிவெடுக்கும் திறனின் பலவீனத்தையும் அம்பலப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உண்மை:

பொதுவாக புலனாய்வு அமைப்புகள் ஒரு பகுதியில் இருந்து பெறப்படும் தகவல்களை உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் அல்லது ஆயுதப்படைகளுடன் பகிர்ந்து கொள்கின்றன. எனவும் ஆனால் இதுபற்றி  அமைச்சரவை செயலாளருக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் சந்திரசேகர் கூறியுள்ளார்.  

26/11 தாக்குதலின் போது என்ன நடந்தது?:

மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, ​​மத்திய அளவில் யார் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவு இல்லை என்று கே.எம்.சந்திரசேகர் அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார்.  மேலும் சட்டம் ஒழுங்கு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாநில அரசின் கோரிக்கையின் பேரில் மத்திய தலையீட்டுடன் நடைபெறும் நிலையால் அப்போது குழப்பமான நிலையே ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.  

தொடர்ந்து “நான் இந்த நெருக்கடிக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்க விரும்பினேன், ஆனால் இரவு வெகுநேரம் வரை மும்பையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிய எனக்கு உளவுத்துறையோ அல்லது எதனுடைய உதவியோ கிடைக்கவில்லை.” என எழுதியுள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு சரிவு கூறுவது என்ன...வெற்றி வாய்ப்பு யாருக்கு?!!