குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு சரிவு கூறுவது என்ன...வெற்றி வாய்ப்பு யாருக்கு?!!

குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு சரிவு கூறுவது என்ன...வெற்றி வாய்ப்பு யாருக்கு?!!

குறைந்த வாக்குப்பதிவின் அர்த்தம் என்ன?  வாக்குப்பதிவு குறைவதால் யாருக்கு லாபம்?  2017-ல் பாஜக மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் நடந்தது என்ன?  பட்டியல் இனத்தார் மற்றும் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் என்ன நடந்தது? எத்தனை சதவீதம் வாக்குகள் அதிகரித்தன அல்லது குறைந்துள்ளன?  புரிந்து கொள்வோம்...

முதல் கட்ட தேர்தல்:

குஜராத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 89 சட்டசபை தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.  முதல்கட்ட தேர்தலில் 63 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.  2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் நான்கு சதவீதம் வாக்குபதிவு குறைந்துள்ளது.  2017 ஆம் ஆண்டில், 67.20 சதவீத மக்கள் இந்த இடங்களில் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பில் நடந்தது என்ன?:

குஜராத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 89 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.  2007-க்குப் பிறகு இந்த முறை மிகக் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.  2007ல் இந்த 19 மாவட்டங்களில் 60 சதவீத மக்கள் வாக்களித்திருந்தனர். 

பாஜக vs காங்கிரஸ்:

2017ல், முதல் கட்ட தேர்தல் நடந்த 89 சட்டசபை தொகுதிகளில், 48 இடங்களில் பாஜகவும், 38 இடங்களில் காங்கிரசும் வெற்றி பெற்றன.   கடந்த முறை பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில், இம்முறை மூன்றில் இருந்து எட்டு சதவீத வாக்குகள் குறைந்துள்ளன.  சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே சமயம், காங்கிரஸ் ஆக்கிரமித்துள்ள இடங்களில் 2 முதல் 6.50 சதவீதம் வரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இங்கு சராசரியாக 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 
 
பட்டியல் இனத்தார்:

சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தின் ஓபிசி ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் குறைந்த அளவிலேயே வாக்குப்பதிவு காணப்பட்டது.  2017ஆம் ஆண்டை விட இந்த இடங்களில் சுமார் ஆறு சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.  பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 14 இடங்களிலும் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.
 
வாக்குப்பதிவு குறைவின் அர்த்தம் என்ன?:
 
இதைப் புரிந்துகொள்ள, குஜராத்தின் மூத்த பத்திரிகையாளர் விரங் கூறுவதை கேட்கலா.  அவர் கூறுகையில், 'வாக்களிப்பு சதவீதம் சரிவைச் சுட்டிக்காட்டுகிறது.  பழைய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, எப்போதெல்லாம் வாக்குப்பதிவில் சரிவு ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் அந்த இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.  இருப்பினும், ஒவ்வொரு முறையும் இது நடக்கும் என்ற அவசியமில்லை.  எனவே, இம்முறை வாக்கு சதவீதம் சரிவு பாஜகவுக்கு சாதகமாக கூட அமையலாம்.” என்று கூறியுள்ளார்.
 
மேலும் கூறுகையில், “முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை நிலைமை வேறுபட்டுள்ளது.  இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் முழு வீச்சில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. இது தவிர, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., முன்னிலையில் இருப்பதும் அரசியல் கட்சிகளில் சலசலப்பை அதிகரித்துள்ளது.” எனவும் தெரிவித்துள்ளார்.  

தேர்தல் வெற்றி:

வாக்குப்பதிவுகளும் அரசியல் விமர்சகர்களும் பல கணிப்புகளைக் கூறினாலும் இரண்டாம் கட்ட தேர்தலும் நிறைவு பெற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற பின்னரே வெற்றியாளர் யார் என்பது தெரியும்.  பாஜகவின் கோட்டையை காங்கிரஸும் ஆம் ஆத்மியும் உடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ”தாய்மொழி ஆங்கிலத்தை விட...” சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ!!!