”தாய்மொழி ஆங்கிலத்தை விட...” சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ!!!

”தாய்மொழி ஆங்கிலத்தை விட...” சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ!!!

கீழ் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.  தாய்மொழியை ஆங்கிலத்தை விட குறைவாக கருதக்கூடாது.

பட்டமளிப்பு விழா:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு இன்று கலந்து கொண்டு பேசியுள்ளார்.

பிராந்திய மொழிகளில்:

அவர் அவரது உரையில், பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனத்து மாணவர்களுக்கும் முதலில் வாழ்த்து தெரிவித்தார்.  அதைத் தொடர்ந்து பேசிய அவர் இந்திய நீதிமன்றங்கள் மற்றும் சட்ட அமைப்புகளின் பாடத்திட்ட நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

மேலும் இனி வரும் காலங்களில் உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அனைவரிடமும் பேசியுள்ளதாக கூறியுள்ளார்

நிலுவை வழக்குகள்:

நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கவலை தெரிவித்தார் கிரண் ரிஜ்ஜு.  இதற்கு முன்னதாக நவம்பர் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன தின விழாவில் கலந்து கொண்டு பேசிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்றத்தில் 70,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.  

கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் நம் கவனத்தின் மையமாக இருக்க வேண்டும் எனவும் அதே சமயம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை திறம்பட கையாள வேண்டியது அவசியம் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  183 ஆசிரியர்கள் பணிநீக்கம்...காரணம் என்ன?!!