போர் எதிரொலி : ரூ.46,000-ஐ கடந்தது தங்கத்தின் விலை..!

போர் எதிரொலி : ரூ.46,000-ஐ கடந்தது   தங்கத்தின் விலை..!
Published on: 
Updated on: 
1 min read

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கிடையே போர் தீவிரமடைந்து வருகிறது. 

இதன் விளைவாக தற்போது சவரன் 46 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு சவரன் தங்கம், 46 ஆயிரத்து, 160 ரூபாய்க்கும், கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம், 5 ஆயிரத்து, 770 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி, 77ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 77 ஆயிரத்து, 500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com