பதவியை இழக்கிறாரா இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்?!!

பதவியை இழக்கிறாரா இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்?!!
Published on
Updated on
1 min read

பிரிட்டன் மீண்டும் கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லிஸ் டிரஸின் பதவி ஆபத்தில் உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்:

இந்த வாரம் அவர் பதவி விலக நேரிடலாம். இங்கிலாந்து பத்திரிக்கை தகவலின் படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளனர் எனத் தெரிகிறது.

100க்கும் மேற்பட்டவர்கள்...:

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், ஒரு மாதத்திற்குள் டிரஸ் பதவியிலிருந்து விலக வேண்டும்.  தகவல்களின் படி, 100 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ட்ரஸ்ஸுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர்.

கடிதத்தின் மூலம், நம்பிக்கையில்லா தீர்மானத்தைத்  தெரிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும், இல்லையெனில் அவர்களின் ஆதரவில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வருமாறு கேட்கப்படும். 

ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா?:

அதே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர் கிரஹாம் பிராட்டி எம்பிகளின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்ப்பதாக செய்திகள் கூறுகின்றன. டிரஸ்ஸுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் ஜெரமி ஹன்ட் உடன் இணைந்து வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வர ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏன் எதிர்ப்பு:

டிரஸ் அரசாங்கத்தின் இப்போது திரும்பப் பெறப்பட்ட வரிக் குறைப்புக் கொள்கை பிரதமரின் செல்வாக்கை மிகவும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் மட்டும் அவரது புகழ் 10 சதவீதம் குறைந்துள்ளது.

இப்போது 63 சதவீதத்துக்கும் மேலானோர் டிரஸ் பணியால் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், திருப்தி அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் முடிவில் அவரது புகழ் -47 வரை சென்றுள்ளது. 

                                                                                                        -நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com