உக்ரைனை மண்டியிட வைப்பதே ஒரே நோக்கம்....உதவிக்கு வருகிறதா அமெரிக்கா?!!!

உக்ரைனை மண்டியிட வைப்பதே ஒரே நோக்கம்....உதவிக்கு வருகிறதா அமெரிக்கா?!!!
Published on
Updated on
1 min read

ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, ஜெலென்ஸ்கியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.  இந்த பயணத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர்:

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை. இதற்கிடையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வாஷிங்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.  ஆனால், இரு நாடுகளும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்க பயணம்:

ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, ஜெலென்ஸ்கியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.  இந்த பயணத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

பாதுகாப்பு காரணமாக பைடனின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.  அதே நேரத்தில், பயணம் இன்னும் முடிவாகவில்லை எனவும் ஜெலென்ஸ்கி புதனன்று அமெரிக்கா வருவார் என்ற செய்தி உறுதியாகவில்லை எனவும் வெள்ளை மாளிகையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்ததுடன் "அது நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் கூறியுள்ளார். 

புதினின் ஆவேசம்:

ரஷ்யா உக்ரைன் மீது ஏறக்குறைய ஒரு வாரமாக கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஒன்றன் பின் ஒன்றாக நடத்தி வருகிறது.  கடந்த திங்கள்கிழமை காலை நடந்த தாக்குதல்களால் உக்ரைன் நகரங்களில் குழப்பம் மற்றும் அலறல் சத்தங்கள் ஏற்பட்டுள்ளது.  வீதிகளில் ஒலிக்கும் சைரன்கள் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை குறித்து மக்களை எச்சரிக்கிறது.  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது கடும் கோபத்தில் இருப்பதாகவும், உக்ரைனை மண்டியிட விரும்புவதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com