நண்பர்களுக்கு மட்டுமே உதவுகிறாரா பிரதமர் மோடி....விமர்சித்த ராகுல்!!!

நண்பர்களுக்கு மட்டுமே உதவுகிறாரா பிரதமர் மோடி....விமர்சித்த ராகுல்!!!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஒவ்வொரு எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கும் மாநில அரசு 500 ரூபாய் மானியம் அளிக்கும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவான விலையில் பொதுமக்களுக்கு காஸ் சிலிண்டர்களை வழங்குகிறது என்று ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ராஜஸ்தானின் அல்வாரில் நடந்த பேரணியில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஒவ்வொரு எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கும் 500 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அரசை ராகுல் காந்தி மற்றும் அவரது கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை “நண்பர்களுக்கு உதவுவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   10 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்ட இழப்பீட்டு தொகை.....நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?!!