புதிய வருடத்தில் புதிய பாதையை நோக்கி இலங்கை...புதிய திட்டம் வகுக்கிறதா?!!!

புதிய வருடத்தில் புதிய பாதையை நோக்கி இலங்கை...புதிய திட்டம் வகுக்கிறதா?!!!
Published on
Updated on
1 min read

2020ம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு பின்னர் மக்களிடமிருந்து பொருளாதார சுதந்திரம் பறிக்கப்பட்டது என இலங்கையின் நிதித்துறை இணையமைச்சர் ரஞ்சித் சியாமலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  இப்போது மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் திரும்ப வழங்கப்பட வேண்டுமா என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

புதிய வருடத்தில் நாட்டிற்கு புதிய பாதையை வழங்கும் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதே இதன் நோக்கமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் நிதி அமைச்சர் ரஞ்சித் சியாமபலபிட்டிய இது தொடர்பான தகவல் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்புக்கு பிறகு மக்களிடம் இருந்து பொருளாதார சுதந்திரம் பறிக்கப்பட்டது எனவும் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டுமா அல்லது மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

இலங்கை இப்போது சுயசார்பு அடிப்படையிலான பொருளாதாரத்தை ஏற்க வேண்டுமா, அல்லது தொடர்ந்து இறக்குமதியில் நிலைத்திருக்க வேண்டுமா என்று இலங்கை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.  பண நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து இலங்கை அரசாங்கம் 1,645 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்திருந்தது.  

பின்னர், அவற்றில் 795 பொருட்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.  மீதமுள்ள பொருட்களின் இறக்குமதிக்கு மீண்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டுமா, இந்தக் கேள்வி இன்னும் விவாதிக்கப்படுகிறது.  இந்த கேள்விக்கு நாட்டின் வர்த்தக வட்டாரங்களில் அதிக அளவில் கருத்து வேறுபாடு உள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com