அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பஃபேலோ நகரம் கடுமையான பனிப்புயலின் பிடியில் சிக்கியுள்ளது. இங்கு வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறைந்து காணப்படுகிறது.
அமெரிக்காவில் குளிர்காலத்தின் மத்தியில் பனிப்புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஒருவர் அவரது பிறந்தநாளில் பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
56 வயதான வில்லியம் க்ளே என்பவர் பஃபலோ நகரில் பனியில் உறைந்து இறந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. கிறிஸ்துமஸ் அன்று பில்லியம் காணாமல் போன நிலையில் அவரது இறந்த உடலை குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். நியூயார்க்கில் உள்ள பஃபேலோ நகரம் பனிப்புயலின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இங்கு வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறைந்துள்ளது நிலையில் இதுவரை 16 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
-நப்பசலையார்