இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அமெரிக்க தலைவர்களும் தீபாவளி நிகழ்வுகள் தொடர்பான தகவல்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர்.
இந்த முறை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரை தீபாவளிக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளியைக் கொண்டாடவுள்ளார். இந்திய-அமெரிக்க சமூகத்தின் நிர்வாக அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடனுடன் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பார் என தெரிகிறது. வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மறுபுறம், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள அவரது மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் அக்டோபர் 21 அன்று தீபாவளியைக் கொண்டாடுகிறார். இதன்மூலம் அதிபர் ஜோ பைடனுக்கு முன் டொனால்டு ட்ரம்ப் தீபாவளி கொண்டாடுவார்.
அமெரிக்காவுடன் சேர்த்து, உலகின் அனைத்து முக்கிய நாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவரது வாழ்த்துச் செய்தியில், 'தீபாவளியின் வெளிச்சம் இருளில் இருந்து உண்மைக்கு செல்ல நினைவூட்டுகிறது. பிரிவினையில் இருந்து ஒற்றுமைக்கும் விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கும் நம்மை அழைத்து செல்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.” எனப் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோதும் வெள்ளை மாளிகையில் இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடினார். அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளியின் போதும், ”இந்த ஒளியின் திருவிழாவில், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்” என்று டிரம்ப் கூறினார்.
”அமெரிக்காவில் தீபாவளியன்று தீபங்கள் ஏற்றப்படும் போது, நம் நாடு மதம் இல்லாத நாடாக ஜொலிக்கிறது. உண்மைக்கு செல்ல நினைவூட்டுகிறது. பிரிவினையில் இருந்து ஒற்றுமைக்கும் விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கும் நம்மை இட்டுச் செல்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.” என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.