”இந்தியை திணிக்காதீர்கள்...” பிரதமருக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்..!!!

”இந்தியை திணிக்காதீர்கள்...” பிரதமருக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்..!!!
Published on
Updated on
1 min read

ஐஐடி-ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் மத்தியப் பணிகளுக்கான தேர்வில் இந்தியை கட்டாய மொழியாக ஏற்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மோடிக்கு கடிதம்:

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”இந்தியாவின் சாரம் என்பது கலாச்சார மற்றும் மொழிகளின் பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தாக்கத்தால் வரையறுக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

”ஒரு மொழியை மற்றவர்களுக்கு எதிராக ஊக்குவிப்பது இந்தியாவின் ஒருமைப்பாட்டை அழித்துவிடும்” என்றும் தெரிவித்துள்ளார் பினராயி விஜயன். இவ்வாறான முயற்சிகளை வாபஸ் பெறுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பினோய் விஸ்வத்தின் பரிந்துரை:

கேரளாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்பி பினோய் விஸ்வம், இந்தி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கைக்கு அவரது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தக் குழுவின் பரிந்துரை, ‘இந்தியாவின்  பன்முகத்தன்மையை’ ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.  கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாயமாக்குவது இந்தி அல்லாத மற்ற மாநில மாணவர்களை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com