ஈரோடு இடைத்தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

ஈரோடு இடைத்தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 70 புள்ளி 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அதேசமயம், வேட்பாளர்களும் மக்களோடு மக்களாக இணைந்து வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குபதிவில், காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 10 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 27 புள்ளி 89 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44 புள்ளி 56 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59 புள்ளி 28 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் ஆண்கள் 77,183 பேர், பெண்கள் 83,407 பேர், மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் என மொத்தம் 1,60,603 பேர் இதுவரை வாக்களித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com