பொங்கல் தொகுப்பு..! இன்று முதல் டோக்கன் விநியோகம்..!

பொங்கல் தொகுப்பு..! இன்று முதல் டோக்கன் விநியோகம்..!
Published on
Updated on
1 min read

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளனா்.

பொங்கல் தொகுப்பை பெறவுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு இன்று முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். டோக்கன்கள் வழங்குதல், தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட வேண்டிய முறை குறித்து தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பாக, தெருவாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாளொன்றுக்கு 200 முதல் 250 டோக்கன்கள் அளிக்க வேண்டும் என்றும், இந்த டோக்கன்களில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 6 ஆம் தேதி தவிா்த்து மற்ற நாட்களில் டோக்கன்கள் அளிக்கப்படும் எனவும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வேண்டுமானாலும் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com