2023 - 24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் எப்போது...?

2023 - 24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் எப்போது...?
Published on
Updated on
1 min read

2023 - 24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  

மத்திய பட்ஜெட்டானது, பொதுவாக இரண்டு அமர்வுகளாக நடைபெறும். நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி இடைவேளையுடம் முடிவடையும். இதில் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் அமர்வு தொடங்கும். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.   

மேலும் இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த 2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-- சுஜிதா ஜோதி 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com