சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்....”போராடியேனும் அடைந்தே தீருவோம்” முதலமைச்சர் உறுதி!!!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்....”போராடியேனும் அடைந்தே தீருவோம்” முதலமைச்சர் உறுதி!!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 100 ஆண்டுகால கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளார்.

அண்ணாவின் கனவு:

சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் மீனவர்களின் வாழ்வு செழிக்கும் தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட நாடாக மாறும் என்று அண்ணா எழுதியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உரையாற்றினார்.

வளர்ச்சிக்காக...:

1972 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் வ. உ.சிதம்பரனாரின் சிலையை திறந்து வைத்தபோது தமிழ்நாடு மேலும் வளர வேண்டுமானால் சேதுசமுத்திர திட்டம் மிகமிக அவசியம் என்று முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்தியிருந்தார். 

ஒதுக்கப்பட்ட நிதி:

அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் இத்திட்டத்திற்கான பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு இந்த திட்டத்துக்கான பாதை எது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பலன்கள் என்னென்ன:

கப்பல்களின் பயண நேரம் பெரும் அளவில் குறையும்.  தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களின் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும்.  சிறு சிறு துறைமுகங்களை உருவாக்க முடியும்.  கடல்சார் பொருள் வர்த்தகம் விரிவடையும்.

மீனவர்களுக்கு..:

அதனோடு மீனவர்களுடைய பொருளாதாரத்துடன் அவர்களின் வாழ்க்கை தரமும் உயரும். மீனவர்களுடைய பாதுகாப்பை கணக்கில் கொண்டு தான் இந்த திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடலுக்கு சென்றுவர மீனவர்களுக்கு இந்த கால்வாய் வசதி அளிப்பதோடு இலங்கை இந்திய கடலோர பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும்.

வேலைவாய்ப்பு:

ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாக வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்.

பேச விருப்பமில்லை:

இவை அனைத்தும் இதுவரை நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை விரிவாக பேச விரும்பவில்லை என முதலமைச்சர் கூறியுள்ளார்.

எச்சரித்த பாஜக:

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தின் வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்று மத்திய பாஜக அரசு எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளது.

ஆனால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்தது எந்த மாதிரியான இடம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

போராடியும் நிறைவேற்றுவோம்:

இத்தகைய நிலைப்பாட்டிற்கு பாஜக அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திர திட்டத்தை போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை பேரவையின் சார்பில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com