துரதிர்ஷ்டவசமாக, சட்டத் தொழிலானது ஆன்களுக்குரியதாக இருப்பதால் அது பெண்களை வரவேற்கவில்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அதனோடு அது சமூகத்தின் விளிம்புநிலை மக்களையும் அது ஆதரிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
பெண்களின் பங்களிப்பு:
இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் விழா ஒன்றில் பங்கேற்று வழக்கறிஞர் தொழிலில் பெண்களின் பங்களிப்பு குறித்து நிறைய பேசியுள்ளார். வழக்கறிஞர் தொழில் ஆண்களுக்குரியது இங்கு பெண்களுக்கு வரவேற்பு இல்லை என்று கூறியுள்ளார். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் குளோபல் லீடர்ஷிப் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தலைமுறையாக..:
உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஏன் குறைவாக உள்ளனர் என அடிக்கடி கேட்கப்படுவதாக கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட், அதற்கு பதிலளிக்கும் விதமாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர் தொழில் இருப்பதாகவும் அது தலைமுறையாக தொடர்வதாகவும் கூறிய அவர் விளிம்புநிலையில் இருக்கும் சமூகத்தினரை ஏற்க மறுப்பதாகவே தெரிகிறது எனவும் பதிலளித்துள்ளார்.
ஜனநாயகம்:
சட்டத்துறையில் ஏற்படும் மாற்றம் குறித்து அவர் கூறுகையில், எதிர்காலத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமானால், சட்டக் கல்வி வழங்கும் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் சட்டக் கல்விக்கான அணுகல் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: மீண்டும் எபோலா வைரஸ்....தொடரும் பலி எண்ணிக்கை.....